படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

இயற்கை விவசாயம் – ஒரு அறிமுகம்

யற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுக்கு இசைவாக, மண்ணின் தன்மையை நச்சுப்படுத்தாமல், நீர்வளத்தைக் கெடுக்காமல், இயற்கையாக கிடைக்கும் உரங்களைப் பயன்படுத்தி பலன் காண்பதாகும்.

இதில் செயற்கை ரசாயன உரங்கள், மருந்துகளுக்கு இடமில்லை.  மாறாக  பயிர்களின் கழிவுகளை மக்க வைத்துப் பயன்படுத்துகிறார்கள். அதேபோல, பண்ணைகளில் கால்நடைகளின் கழிவுகளான சாணம், ஆட்டுப் புழுக்கை போன்றவற்றை மட்டுமே உரமாகப் பயன்படுத்துகிறார்கள். வீடுகளில் குப்பைகளை மக்க வைத்து எருவாக்கி பயன்படுத்துவது, மண்ணை பலமடங்கு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

விவசாயிகளின் நண்பனான மண்புழு மூலம் உரம் தயாரித்துப் பயன்படுத்துவது.

பசுந்தாள் உரங்களை மட்டுமே பயன்படுத்துவது. ஊடுபயிர்களுக்கு முக்கியத்துவம் தருவது. இயற்கை நமக்குத் தந்திருக்கும் வேம்பு போன்றவற்றின் மூலம் தயாரிக்கப்படும் பூச்சுக் கொல்லிகளைப் பயன்படுத்துதல் இயற்கை விவசாயத்தின் முக்கிய அங்கம்.

இவை தவிர நல்ல நீர் மேலாண்மையும் நல்ல கால்நடைகளை வளர்ப்பதும் இதன் இன்னொரு அங்கமாகும்.

இயற்கை விவசாயத்தின் முக்கியமான அம்சம்… காலச் சூழலுக்கேற்ப, கிடைக்கும் இயற்கையான விஷயங்களை நமது தேவைக்கேற்ப பயன்படுத்தும் புத்திசாலித்தனம், லாவகம். அது மட்டும் இருந்துவிட்டால், யாருமே இயற்கை விவசாயிதான்!

-விவசாயி

Comments

  1. Panchagavya & Amirth Karaisal are also Most powerful Organic Fertilizer’s:

    How to Prepare Pacnhagavya:

    http://www.youtube.com/watch?v=MindIXXcF4M

உங்கள் கருத்தை பகிருங்கள்

*