படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

உழவன் உணவகம்… ஆரோக்கியமும் சுவையும் ஒரே இடத்தில்!

துரை மாவட்ட ஆட்சியராக இருந்த சகாயத்தின் யோசனையில் உருவானது உழவன் உணவகம். மதுரை நத்தம் சாலையில், எளிமையாக அமைந்துள்ள உணவகம் இது.

இங்கே கிடைக்கும் அனைத்து உணவுகளும் முழுக்க முழுக்க கிராமத்து சமையல்தான்.  திணை, கம்பு, சாமை, வரகு போன்ற சிறுதானியங்களில் செய்யப்படும் பாரம்பரிய உணவுகள் மற்றும் மூலிகை உணவுகள்தான் இங்கே விற்பனை செய்யப்படுகின்றன.

அத்திப்பழ அல்வா, முள் முருங்கை தோசை, செம்பருத்தி இட்லி, குதிரைவாலி பொங்கல், திணையில் செய்த சேவு, பணியாரம், தூதுவளை துவையல்… என பெயர்களைக் கேட்கும்போதே மனசு பால்யத்துக்கு தாவிவிடும். அந்த இனிய நினைவுடனே, அத்தனை உணவுகளையும் சுவைக்க முடிகிறது.

இங்கு சாப்பிட்ட பிறகுதான் நாம் எவ்வளவு ஆரோகியமான உணவுகளை தவறவிட்டிருக்கிறோம் என்ற உண்மையே புரிகிறது.

உழவன் உணவகம் மாவட்டந்தோறும், ஏன் தாலுகாக்கள் தோறும் அமைய வேண்டும். அந்தந்த பகுதிகளில் வழக்கத்தில் உள்ள கிராமத்து உணவுகளை நகர மக்களுக்கு அறிமுகப்படுத்துவது, நம் உணவுப் பாரம்பர்யத்தைக் காக்கும்!

-விவசாயி

உங்கள் கருத்தை பகிருங்கள்

*