படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

நிலமில்லாத ஏழைகளுக்கு இலவச நிலம்… மத்திய அரசின் புதிய திட்டம்!

டெல்லி: அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிலமில்லாத ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தும் உள்ளது.

2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக அனைத்து தரப்பு மக்களிடமும் ஆதரவை பெற்று, மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தவிருக்கிறது.

ஏழை மக்கள் வேலை வாய்ப்பை பெறும் உரிமையை நிலைநாட்ட, தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் உள்ளது. அதுபோல் நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள ஏழை மக்களில் கணிசமானவர்களுக்கு சொந்த நிலம் இல்லை. அவர்கள் ஒரு ஏக்கரில் 10-ல் ஒரு பங்கு நிலமாவது வாங்கும் வகையில் நிதி உதவி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நிலம் பெறும் உரிமையை சட்டப் பூர்வமாகவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இன்னும் 6 மாதத்தில் இதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறது.

இது சோனியா யோசனை…

ஏழைகள் நிலம் பெறுவதை சட்டப்பூர்வமாக உரிமையாக்க வேண்டும் என்பதில் தேசிய ஆலோசனைக் குழு தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சோனியா தீவிரமாக உள்ளார்.

ஏழைகள் நிலம் வாங்குவதற்கு வசதியாக தலா ரூ.20 ஆயிரம் கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக மத்திய அரசு தனிக் குழுவை உருவாக்கி உள்ளது.

அந்த குழுவில் மத்திய மந்திரிகள் ஜெய்ராம் ரமேஷ், கிஷோர் சந்திரதேவ் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

பிறகு மத்திய மந்திரி ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “உலகில் எந்த ஒரு நாடும் ஏழைகளுக்கு இப்படி நிலம் கொடுக்கும் திட்டத்தை இதுவரை செயல்படுத்தவில்லை. நிலம்பெறும் உரிமையை இதுவரை எந்த நாடும் சட்டமாக்கவும் இல்லை.

இந்தியாவில் நிலம் தொடர்பான அனைத்து உரிமைகளும் மாநில அரசுகளிடமே உள்ளன. எனவே ஏழைகளுக்கு நிலம் கொடுக்கும் சட்டம் மற்றும் வழி முறைகள் குறித்து மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

நிலம் வாங்க தரப்படும் தொகை குறைவானது என்பதை நாங்களும் அறிவோம். எனவே அந்தத் தொகை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது,” என்றார்.

தயவு செய்து விவசாய நிலங்களை தொழிற்சாலைகளுக்கு தருவதை உண்மையாகத் தடுக்க ஒரு சட்டம் கொண்டு வாங்க அமைச்சர் அவர்களே!

-விவசாயி

உங்கள் கருத்தை பகிருங்கள்

*