படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

சம்பா சாகுபடி: மானிய விலையில் உரங்கள் பெற…

தஞ்சை: சம்பா சாகுபடிக் காலம் தொடங்கவிருக்கும் நிலையில், விவசாயிகள் மானிய விலையில் உரங்கள் பெறுவதற்கான வழிமுறைகளை வேளாண்மைத் துறை அறிவித்துள்ளது.

சம்பா சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் 25 முதல் 75 சத மானியத்தில் உரங்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட சம்பா சாகுபடி சிறப்புதொகுப்பு திட்டத்தில் ஜிப்சம், நுண்ணூட்ட உரம் சிங்சல்பேட் உயிர் உரம் ஆகியவை 75 சத மானியத்திலும், ரசாயன உரம் 25 சத மானியத்தில் பெற்று விவசாயிகள் பயன்பெறலாம்.

ஒரு ஹெக்டேர் நெல் பயிருக்கு தேவையான சிங்சல்பேட் விலை 799 ரூபாயாகும். ஒரு ஹெக்டேர் நெல்பயிருக்கு தேவையான 500 கிலோ ஜிப்சம் விலை ரூ 1050 ஆகும்.

75சத மான்யம் ரூ 787 விவசாயிகள் செலுத்த வேண்டியது ரு 263.

ஒரு ஹெக்டேர் நெல் பயிருக்கு தேவையான நுண்ணூட்ட உரம் 12.5 கிலோ. இதன் விலை ரூ 303ஆகும். 75 % மானியம் ரூ227 போக, விவசாயிகள் செலுத்த வேண்டியது ரூ 76 மட்டுமே.

ஒரு ஹெக்டேர் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் 13 பாக்கெட்டுகள் பாஸ்போபாக்டீரியா 13 பாக்கெட் சேர்த்து முழு விலை ரூ156. 75% மான்யம் ரூ117.விவசாயிகள் செலுத்த வேண்டியது ரூ.39 மட்டுமே.

அனைத்து விவசாயிகளுக்கும் உயிர் உரங்கள் மானியத்தில் வழங்கப்படுகிறது.  இத்துடன் ஜிப்சம் அல்லது சிங்சல்பேட் அல்லது நுண்ணூட்ட உரம் ஏதாவது ஒன்று மட்டும் மானியத்தில் வழங்கப்படும்.

இதனை சம்பந்தப்பட்ட பகுதி வேளாண் உதவிஅலுவலர் பரிந்துரை பெற்று வேளாண் விரிவாக்க மையத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

ரசாயன உரங்கள்..

ரசாயன உரம் 25%மானியத்தில் ஒரு ஹெக்டேருக்கு 82 கிலோ யூரியா,130 கிலோ டிஏபி, 50 கிலோ மியூரட் ஆப் பொட்டாஷ் வழங்கப்படுகிறது.

இதன் முழுவிலை ரூ 4.400. மான்யம் ரூ1,100. விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகை ரூ3,300. இதனை வேளாண் உதவி அலுவலர் பரிந்துரை பெற்று சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மூலம் பெறலாம்.

அரசு அறிவித்துள்ள ஆவணங்களுடன் தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலரை தொடர்பு கொண்டு மானியத்தில் உரங்களைப் பெற்று பயன் பெறலாம்.

உங்கள் கருத்தை பகிருங்கள்

*