படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

பிளாஸ்டிக் பைகளுக்கு பை சொல்வோம்.. மஞ்சள் பைக்கு மாறுவோம்!

ன்னும் பல நூறு ஆண்டுகள் போனாலும், பூமியை விட்டு அகற்றவே முடியாத நச்சாக அச்சுறுத்தி வருகிறது பிளாஸ்டிக் பைகள்.

பிளாஸ்டிக் எனும் நெகிழிப் பொருளின் பயன்பாட்டை முற்றாக ஒழிப்பதும் நடைமுறையில் சாத்தியமற்றது என்றாலும், மறுசுழற்சிக்கு உட்படாத வகையில் வரும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துவதை நாமாகக் குறைத்துக் கொள்வதுதான் நம் முன் இருக்கும் ஒரே வழி.

மறுசுழற்சிக்கு ஏற்ற வகையிலான நெகிழிப் பைகள் விலை அதிகம் என்பதால் கடைகாரர்கள் இப்போது எந்த பையையும் தருவதில்லை. கடைகளுக்குச் செல்லும் கொஞ்சம் சோம்பேறித்தனம் பார்க்காமல் வீட்டிலிருக்கும் மஞ்சள் பை அல்லது ஷாப்பிங் பையை எடுத்துச் செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்வோம்.

ப்ளாஸ்டிக் டம்ளர்களை அதிகம் உபயோகிக்கத் தொடங்கியிருக்கிறோம். குறிப்பாக டாஸ்மாக் நேசர்கள் மிக அதிக அளவில் இந்த டம்ளர்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். இதற்கும் மாற்று உண்டு. சற்று உறுதியான காகித டம்ளர்கள் இப்போது விற்பனைக்கு வந்துள்ளன. இவை பிளாஸ்டிக்கின் தன்மையுடன் இருக்கும். ஆனால், எளிதில் மட்கும் தன்மை கொண்டவை.

இன்னொரு முக்கியமான விஷயம்… பயன்படுத்தும் ப்ளாஸ்டிக்குகளை கண்ட இடத்தில் வீசி எறியாமல் அப்படியே தனியாக சேர்த்து வைத்து குப்பை வண்டியில் சேர்த்துவிட வேண்டும். இதுதான் ரொம்ப முக்கியமானது… நம்மால் எளிதில் முடியக் கூடியதும்கூட. வயல்களையும் விவசாயத்தையும் காத்துக் கொள்ள வேண்டுமானால் நாம் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் இருக்க வேண்டும்.

சுற்றுச் சூழலைக் காக்க மரம் நடுவது, காடுகளை பராமரிப்பது போன்ற கஷ்டமெல்லாம் நாம் பட வேண்டாம். அதை பார்த்துக்கொள்ள அமைப்புகள் உள்ளன. அட்லீஸ்ட், நம்மால் எளிதில் முடிந்த இந்த ப்ளாஸ்டிக் தவிர்ப்பையாவது கடைப்பிடிக்கலாமே!!

-விவசாயி

உங்கள் கருத்தை பகிருங்கள்

*