படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

நெல் வரத்து இல்லை… அரிசி விலை கிடுகிடு உயர்வு!


நெல்லை: நெல் வரத்து குறைந்துள்ளதால் அரிசி, நெல் விலை மளமளவென உயர்ந்துவிட்டது.

தொடர் மின் வெட்டால் அரவை ஆலைகளும் முடங்கியுள்ளதால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் சாரல் பொய்த்து விட்டதால் கார் நெல் சாகுபடி நடக்கவில்லை. நெல் தட்டுப்பாடு காரணமாக பாவூர்சத்திரம் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகளில் அரவைக்கு நெல் கிடைக்கவி்ல்லை. மேலும் அறிவிக்கப்படாத 14 மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டால் பாதிக்கும் மேற்பட்ட ஆலைகள் இயங்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.

மாவட்ட பகுதிகளில் நெல் மகசூல் இல்லாததால் கோபிச் செட்டிபாளையம், தஞ்சாவூர், திருத்துறைப்பூண்டி மற்றும் ஆந்திராவில் இருந்து நெல் வரத்து இருந்தது.

இந்நிலையில் நீலம் புயல் காரணமாக வட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் வயல் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து நெல் அறுவடை செய்ய முடியாமல் போனது. இதன் காரணமாக அங்கிருந்தும் நெல் வரத்து அடியோடு நின்றுவிட்டது. இதனால் நெல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

டீலக்ஸ் பொன்னி அரிசி குவிண்டால் ரூ.3200லிருந்து ரூ.3500 ஆகவும், செல்லப்பொன்னி ரூ.2800லிருந்து ரூ.3000 ஆகவும், அம்பை 16 ரகம் ரூ.2500லிருந்து ரூ.2700 ஆகவும் விலை அதிகரித்துள்ளது.

-விவசாயி

Comments

  1. Please Send Rice Price For My Mail Id

உங்கள் கருத்தை பகிருங்கள்

*