படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

உங்கள் சந்ததிக்கு உணவை விட்டுப்போங்கள்!

‘விவசாயத்துக்கு எதிர்காலமே இல்லாம போச்சு.. பேசாம இருக்குற நிலத்தை ப்ளாட் போட்டு வித்துட்டு பேங்குல போட்டா வர்ற வட்டி காசுலயாவது நிம்மதியா நாலு வாய் சாப்பிடலாம்’னு சொல்றத கேட்டிருப்பீங்க.. அதைத் தீவிரமா செய்யவும் தொடங்கிட்டாங்க ஊர்ப்பக்கம் எல்லாம்.

சரி, வித்த காசுல எவ்வளவு நாள் கைய கால நீட்டி சாப்பிட முடியும் என்று கொஞ்சம் எதிர்காலத்தை யாராவது யோசிக்கிறார்களா… ம்ஹூம்.

அதாவது ஜப்பான், சீனா போன்ற நாடுகள் விவசாயத்தை ஊக்குவிக்கத் தொடங்கி ரொம்ப நாளாச்சி. ஏன்னா.. ஜப்பானில் விவசாய நிலம் குறைவு. அதனால் மலைகளிலும், பள்ளத்தாக்குகளிலும் மட்டுமல்ல, எங்கெல்லாம் நிலம் கிடைக்கிறதோ அவற்றையெல்லாம் பயிரிடும் நிலமாக மாற்ற தேவையான எல்லாவற்றையும் செய்து வருகிறார்கள்.

சீனாவோ, தனது மக்கள் தொகையை கணக்கில் வைத்துக்கொண்டு உணவு உற்பத்தியை அதிகரிக்கும் வழிகளை கையாண்டு வருகிறது. ஆனால் நம் நாட்டில் விவசாய நிலங்கள் அதிகமிருந்தும் அதை பயன்படுத்துபவர்கள் குறைந்துகொண்டு வருகிறார்கள். அல்லது நிலங்களைக் குறைத்துக் கொண்டு வருகின்றனர்.

காரணம், பட்டணத்திற்கு போகிறவர்கள், அல்லது பட்டணத்து வாசிகள் இன்னும் சுகவாசிகளாக வாழ்வதை தங்களின் உழைப்புடன் ஒப்பிட்டுக்கொள்வது ஒரு காரணம். மற்றொன்று பேராசை. வாழ்தலின் பொருட்டும் தங்களின் விவசாய நிலங்களை பலிகொடுக்கின்றனர்.

இதனால் உற்பத்தி திறன் மகா கேவலமான நிலையை எட்டிவிடும் அபாயத்தை இந்தியா, குறிப்பாக தமிழ்நாடு இன்னும் குறுகிய காலகட்டத்துக்குள் எட்டிவிடும் என்பது உறுதி.

ஒரே உதாரணம்தான். மின்சார தட்டுப்பாடு இந்தளவுக்கு வரும் என்று கடந்த சில வருங்களுக்கு முன்பாவது யோசித்திருப்போமா? இல்லையே… தாராளமாக விரயம் பண்ணிக்கொண்டிருந்தோம். ஆனால் இருள் தேசமாக இன்று மாறி நிற்கிறதே… இது உண்மை என்றால் நீங்கள் உணவுக்கும் கை ஏந்தும்  நிலை வெகு தூரமில்லை என்பதும் மறுக்க முடியா உண்மை!

எவனொருவன் விவசாய நிலத்தை விற்காமல் பயிரிட்டு வருகிறானோ  அவன் உலக பணக்காரர்கள் வரிசையில் நிச்சயம் இடம் பெறப் போகிறான் என்கிறார்கள், இந்தியாவின் வளர்ச்சியை உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டவர்கள்.

கார், வீடு, வசதி இன்ன பிறவெல்லாம்தான் மக்களுக்கு இன்று மிகப்பெரிய  சொத்துக்களாகத் தெரிகின்றன. இந்த உலகத்தின் நீர் ஆதாரம், உணவு , மின்சாரம், எரிபொருள் எல்லாம் ஒரு கட்டத்தில் தட்டுப்பாட்டை நோக்கி தள்ளப்படும் மிகப்பெரிய சவாலை உலகத்தின் எல்லா மூலையும் உணர்ந்திருந்தும், இன்னமும் நாம் செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.

கையிலிருக்கும் பூமியை ஆராய்வதை விட்டுவிட்டு, கிரகங்களை ஆராய்வதில் எந்த பலனும் இல்லை. பூமியில் விவசாய நிலங்களை எப்படி பெருக்குவது, உணவு உற்பத்தியை அதிகப்படுத்துவது எப்படி? நீர் ஆதாரங்களை உருவாக்குவது குறித்த ஆராய்ச்சிகள் இன்று மிக மிக அவசியம். இல்லையேல் நமக்கு பூமி ஒரு எரிதழலாகவும், ஒருவரை ஒருவர் அடித்து சாப்பிடும் அவல நிலமாகவும் மாறப்போவது உறுதி.

உங்கள் விவசாய நிலங்களை எதற்காகவும் விற்காதீர்கள்… விற்றால் உங்களுக்கு எதிர்காலம் இல்லை. விவசாய நிலங்களை வைத்திருப்பவர்கள் ஊருக்கே உணவிடப்போகும் பெரும் புண்ணியவான்கள் என்ற நிலை வரப் போகிறது. இதற்கு இன்னும் நூறு வருடம் ஆகப்போவதில்லை. விளைச்சல் குறைகிறது. கொள்பவர்களின்  எண்ணிக்கையோ கொள்ளை கொள்ளையாய் பெருகுகிறது. இன்னும் பத்து வருடங்கள் மிஞ்சி போனால் இருபது வருடம்.. உங்கள் விவசாய நிலங்களை பத்திரப்படுத்துங்கள். விவசாயத்தை தொடருங்கள்..  இதுவரை வயல்களை மறந்து நகரத்தில் கழித்தவர்கள், இன்றே உங்கள் கிராமங்களை நோக்கிச் செல்லும் பயணத்துக்கு திட்டமிடுங்கள்…

உங்கள் சந்ததிக்கு உணவை விட்டுப்போங்கள்!

ஆ. ஜான்

Comments

  1. new york university langone medical center jobs for 11 year olds that pay well . ar 15 mag well grip buy clomid maryland state health insurance tower health insurance claim form

  2. l&t health and fitness acquistare ritalin florida child health insurance comprar ritalin online performance enhancing drugs facts

உங்கள் கருத்தை பகிருங்கள்

*