படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

ஆன்லைனில் விவசாய சந்தை.. ஒரு அறிமுகம்!

ன்றைக்கு இணையவெளியில் ரொம்பப் பிரபலம் ஆன்லைன் சந்தை எனப்படும் மெய்நிகர் சந்தை.

கிராமங்களில் பொருள்களை சந்தைக்கு கொண்டுபோய் விற்பனை செய்வதைப் போல, ஆன்லைனிலும் செய்ய முடியும். பொருட்களை விற்போரும் வாங்குவோரும் தங்களது உற்பத்திப் பொருளையும் தேவைப்படும் பொருளைப் பற்றியும் இங்கே தகவல்களைப் பறிமாறிக் கொள்ளலாம்.

அவரவர் முகவரி அல்லது தொலைபேசி எண்ணையும் மறக்காமல் குறிப்பிட வேண்டும்.

உம்: என்னிடம் 10 மூட்டை நிலக்கடலை உள்ளது. தரமான கடலை. வேண்டுவோர் வாங்க அணுகவும்.. செல் அல்லது தொலைபேசி எண் அல்லது முகவரி.

அதேபோல,

எனக்கு தரமான கொத்தமல்லி தேவை அல்லது பூக்கள் தேவை… பயிரிட்டிருப்போர் அணுகவும். செல் அல்லது முகவரி…

-இந்த மாதிரி ஆன்லைன் சந்தை மூலம் நியாயமான விலையில் தரமான பொருளைப் பெற முடியும்.

இதில் நம்முடைய பங்களிப்பு, இணையத்தில் இரண்டு பக்க தகவல்களையும் வெளியிடுவது மட்டுமே. விற்போரும் வாங்குவோரும் அவரவர் இடத்தில் சந்தித்து வர்த்தகத்தை முடித்துக் கொள்ளலாம்.

கவனிக்க, விவசாய விளைபொருட்களுக்கான விற்பனை மற்றும் வாங்கும் பகுதி இது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

-சந்தைசாமி

உங்கள் கருத்தை பகிருங்கள்

*