படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

இரண்டு வாரம் மழை பெய்தும் பல ஆயிரம் ஏரி குளங்கள் நிரம்பவே இல்லை!

சென்னை: தமிழகத்தில் கடந்த இரு வார காலத்தில் பெய்த மழையிலும் பல ஆயிரம் ஏரி குளங்கள் நிரம்பாதது விவசாயிகளுக்கு கவலை தந்துள்ளது.

இந்த சீஸனில் இதுவரை அதிக மழை பெய்த பகுதிகள் காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற பகுதிகள்தான்.

ஆனால், இந்த மாவட்டங்களில் உள்ள பல ஆயிரம் ஏரி குளங்களில் குறைந்த அளவு தண்ணீரே உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில்  கடந்த இரு வாரமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்திருந்தாலும் நீராதாரங்களில் போதிய நீர் இருப்பைக் காணமுடியாதது குறித்து விவசாயிகள் ஏமாற்றம் தெரிவிக்கிறார்கள். தற்போதைய மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கிறது. இது குடிநீர் பிரச்னைக்கு ஓரளவுக்குத் தீர்வை ஏற்படுத்தியிருக்கிறது. அதேநேரத்தில் விவசாயத்துக்குப் போதுமான மழையை இன்னும் எதிர்பார்த்திருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள்.

ஏரி குளங்களில் நீர் நிரம்பாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கோடையில் கால்வாய்களையும், குளங்களையும் தூர்வாரி சீர்படுத்தவில்லை. விவசாயத்துக்கான நீராதாரங்களைப் பெருக்க அடிப்படை பிரச்னைகளைக்கூட தீர்க்கவில்லை.

இந்நிலையில், தற்போதைய மழையை நம்பி பிசான சாகுபடிக்கான பணிகளை விவசாயிகள் தொடங்கியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்தை பகிருங்கள்

*