படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

மகசூல் அதிகம் தரும் நேரடி நெல் விதைப்புக் கருவி


து புதிய சமாச்சாரம் இல்லைதான். ஆனால் இன்னும் அறிமுகமாகாத கிராமத்தினருக்கு புதிய விஷயம்.

நேரடி நெல் விதைப்புக் கருவி.

ஒரு ஏக்கர் நெல் நடவு செய்ய, குறைந்தபட்சம் 30 நபர்கள் தேவை. ஆனால், நேரடி நெல் விதைக்கும் கருவி இருந்தால் ஒரு ஆளே ஒரு ஏக்கரில் விதைத்துவிட முடியும். சிறுவர், பெண்கள், முதியோர் என அனைவரும் இதை சுலபமாக இயக்க முடியும். இதன் மூலம், ஆள்செலவு, பணச்செலவு மிச்சமாகிறது. குறிப்பாக விவசாய கூலி ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ள இந்த நாட்களில் இந்த கருவி விவசாயிகளின் உற்ற தோழனாகத் திகழ்கிறது. இதன் மூலம் 30 சதவீதம் வரை மகசூலும் அதிகரிக்கும்.

இக்கருவியில் நான்கு உருளை வடிவ விதைப்பெட்டிகள் உள்ளன. இந்த விதைப் பெட்டிகளில் 150 மிமீ இடைவெளியில் 2 வரிசைகளில் துளைகள் போடப்பட்டுள்ளன. கருவியின் நடுவில் 600 மிமீ வட்டமுள்ள சக்கரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவியை ஒருவர் இழுத்துச் செல் கைப்பிடி ஒன்றும் உள்ளது. சேற்று வயல்களில் எளிதாக இழுத்துச் செல்வதற்கேற்ப இரண்டு வழுக்குத் தகடுகள் உள்ளன.

கொஞ்சம் மேம்படுத்தப்பட்ட வடிவில்..

நெல் நாற்று நடவு தவிர்க்கப்படுகிறது. தனியே பசுந்தாள் பயிரிடுவதும் தவிர்க்கப்படடுகிறது.

இதனால் எக்டருக்கு ரூ.3000 வரை சாகுபடி செலவு குறைகிறது.

இக்கருவியின் விலை, 4 ஆயிரத்து 800 ரூபாய்.  இதற்கு மானியமும் உண்டு. பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள வேளாண் அறிவியல் மையங்களில் இந்தக் கருவி விற்பனைக்குக் கிடைக்கிறது. தொடர்புக்கு:  044-27452371

-வில்லேஜ் விஞ்ஞானி

Comments

  1. shanmugasundharam says:

    unmayilaye neenga oru village vinnyani boss… great one.

  2. nalla seithi

உங்கள் கருத்தை பகிருங்கள்

*