படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

வெப்பமயமாகும் வட துருவம்… பனிப் பகுதி குறைந்து தாவரங்கள் அதிகரிப்பு!

733097main1_Northern_ndvi_FINAL-673

படோசனா: வட துருவப் பகுதிகளில் வெப்பம் அதிகரித்து வருகிறது. இதுவரை வெண்பனிப் படலமாகக் காட்சி தந்த வட துருவப் பிரதேசங்களில் இப்போது பசுமை காணப்படுகிறது.

கிரீன்ஹவுஸ் விளைவு (புவி முற்றிலும் குளிர்ந்துவிடாமல் இருக்க குறிப்பிட்ட அளவு வெப்பத்தை வளிமண்டல வாயுக்கள் மெயின்டெய்ன் செய்வதுதான் கிரீன்ஹவுஸ் எஃபெக்ட்!) காரணமாக, பூமியின் தென் துருவத்தில் பசுமைத் தாவரங்கள் அதிகரித்து வருகின்றன.

இதே நிலை வட துருவத்திலும் உள்ளதா என்பதைக் கண்டறிய நாசா நிதியுதவியுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளில் வட துருவப் பகுதியில் நடந்த வெப்ப மாறுதல்களின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சர்வதேச நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்று இந்த ஆய்வில் இறங்கியது. பூமியின் மேற்பரப்பில் நிகழும் வெப்ப மாற்றம் மற்றும் தாவரப் பெருக்கம் ஆர்க்டிக் பகுதியில் எத்தகைய மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளது என்ற கோணத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், “வட துருவத்தில் வெப்பம் அதிகரித்து வருகிறது. ஆர்க்டிக் சமுத்திரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் பனியின் தன்மை, பனி உருகும் நேரம் மிகவும் குறைந்துவிட்டது. பனி உருவாவதை விட அதிக அளவு தாவரங்கள் பெருக ஆரம்பித்துவிட்டன,” என்று பாஸ்டன் பல்கலைக்கழக புவி சுற்றுச்சூழல் நிபுணர் ரங்க மைனேனி தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் ஒரு காலத்தில் முழுக்க பனிபோர்த்திய மலை இது.. இன்று பனி எந்த அளவு உருகி பசுமையாகக் காட்சி தருகிறது என்பதை படத்தில் காணலாம்!

ரஷ்யாவின் வடக்குப் பகுதியில் ஒரு காலத்தில் முழுக்க பனிபோர்த்திய மலை இது.. இன்று பனி எந்த அளவு உருகி பசுமையாகக் காட்சி தருகிறது என்பதை படத்தில் காணலாம்!

இந்த நிலை புவியின் சுற்றுச்சூழல் அமைப்பில் பெரும் சிக்கல்களைத் தோற்றுவிக்கலாம் என இந்த ஆய்வு எச்சரித்துள்ளது.

வட துருவப் பகுதியில் அமெரிக்காவின் மொத்த நிலப்பரப்புக்கு இணையான பகுதியில் (9 மில்லியன் சதுர கிமீ) பனி குறைந்து தாவரங்கள் பெருகியுள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

-விவசாயி

படங்கள்: நாசா

உங்கள் கருத்தை பகிருங்கள்

*