படைப்புகளை அனுப்ப...பதிவு செய்

புதிய தென்னந்தோப்பு அமைக்க 50 சதவீத மானியம்!

அரியலூர்:  புதிதிதாக தென்னந்தோப்பு அமைக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் அறிவித்துள்ளார்.

மற்ற மாவட்டங்கள் சிலவற்றிலும் இந்தச் சலுகை ஏற்கெனவே அமலில் உள்ளது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

ஆட்சியரின் அறிவிப்பு விவரம்:

“தென்னை வளர்ச்சி வாரிய திட்டத்தின் மூலம் புதிதாக தென்னந்தோப்பு அமைக்கும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 17,500-ம், பழைய தென்னந்தோப்பை பராமரிக்க ஹெக்டேர் ஒன்றுக்கு 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 17,500-ம் மானியமாக வழங்கப்படும்.

தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த பண்ணையம் நஞ்சை மாதிரி அமைக்க 24 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிக்கு 50 சதவீத மானியத்தில், அதிகபட்சமாக ரூ. 1 லட்சமும், நீடித்த நவீன கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிக்கு ஹெக்டேர் ஒன்றக்கு 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும்.

மேலும், துல்லிய பண்ணையம் அமைக்க ஹெக்டேர் ஒன்றுக்கு 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரமும், தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் அதிகபட்சமாக ரூ. 900 மதிப்பீட்டில் உயிரியல் காரணியும், 50 சதவீத மானியத்தில் ஹெக்டேர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 1,250 மதிப்பீட்டில் நுண்சத்து வழங்கப்படும்,” என்றார்.

உங்கள் கருத்தை பகிருங்கள்

*